கட்டுநாயக்க விமான நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக நீண்ட நேரம் மக்கள் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
தாய்லாந்தின் பாங்கொக் நகருக்கு புறப்படவிருந்த இலங்கை விமானம் 10 மணித்தியாலங்கள் 27 நிமிடங்கள் தாமதமாகியுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-402 கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து நேற்று (03) அதிகாலை 01.10 மணிக்கு தாய்லாந்தின் பாங்கொக் நகருக்கு புறப்படவிருந்தது.
ஆனால், 10 மணித்தியாலமும் 27 நிமிட தாமதத்துக்கு பின்னர், இந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இரவு 11.37 மணிக்கே புறப்பட்டது.
அதேவேளை பாங்கொக்கிலிருந்து இன்று (04) காலை 10.40 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL-403 விமானத்தின் வருகையும் தாமதமாகியதாக தெரியவருகிறது.
அண்மைக்காலமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைகள் பாதிக்கப்படுவதால், பெருந்தொகை பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam
