கடற்போக்குவரத்து தடைக்கு பின் நெடுந்தீவைச் சென்றடைந்த பயணிகள்
யாழ். (Jaffna) நெடுந்தீவுக்கான மாலை நேர கடற்போக்குவரத்து நேற்று தடைப்பட்டிருந்த நிலையில் குறிகாட்டுவானில் இருந்து பயணிகள் குமுதினிப்படகு மூலம் இரவு 8.30 மணியளவில் நெடுந்தீவைச் சென்றடைந்தனர்.
நேற்று (02) மாலை 4.00 மணிக்கு குறிகாட்டுவானில் இருந்து புறப்பட தயாரான வடதாரகை படகு இயந்திர கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது.
மாற்று படகு சேவை
இந்நிலையில், திருத்த வேலைகளுக்கு பின்னர் பயணம் தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்ததுடன் உடனடியாக மாற்று படகு சேவையும் ஒழுங்கு படுத்தப்பட்டிருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, திருத்தவேலை பயனளிக்காத நிலையில் வடதாரகை சேவை நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து நெடுந்தீவில் இருந்து குமுதினிப் படகு வரவழைக்கப்பட்டு பயணிகள் அனைவரும் பத்திரமாக இரவு 8.30 மணியளவில் நெடுந்தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் காரணமாக, மாலை முதல் துறைமுகப் பகுதியில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், நோயாளர்கள் என சுமார் 60 பேர் வரையில் காத்திருந்து பயணத்தினை தொடர்ந்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri