ஸ்ரீலங்கன் விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட இலங்கையர்
டுபாய்க்கு பயணிக்கவிருந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் இருந்து இலங்கையர் ஒருவர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் பிரபல பாடகரான சாமர ரணவக்க என்பவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
அவர் அதிக அளவில் குடிபோதையில் இருந்ததாகவும், விமானத்தில் ஏறும்போது விமானப் பணிப்பெண்கள் மற்றும் பணியாளர்களுடன் முரண்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விமானப் பணிப்பெண்கள்
விமானப் பணிப்பெண்கள் மற்றும் பணியாளர்களுடன் கடுமையான வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார்.
மது அருந்தி மோசமாக நடந்து கொண்ட பாடகரை விமானத்தில் பறக்க அனுமதிக்க முடியாது என்று விமானத்தின் தலைமை விமானி முடிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் தலைமை விமானி விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பிரபல பாடகர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடிவரவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
தீவிர விசாரனையை மேற்கொண்ட குடிவரவு அதிகாரிகள் விசாரணையின் பின்னர் எச்சரிக்கையுடன் வீட்டுக்கு செல்ல அனுமதித்துள்ளனர்.





தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam
