இரவு முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள வீதி! பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு
பசறை – நமுனுகுல பிரதான வீதி, தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக நமுனுகுள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீதியின் 12ஆம் மைல் தூணுக்கு அருகில் இரண்டு பெரிய மரங்கள் வீதியில் வீழ்ந்தமையினால் ஏற்பட்ட அபாயகரமான நிலைமை காரணமாக இன்று (13) இரவு முதல் அந்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
எல்ல பல்லகெடுவ, நாவலகம, தெமோதர, உடுவர, ஹாலிஎல மற்றும் பதுளை ஊடாக மாற்று வீதியை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வீதி புனரமைப்பு
இன்று (13) பிற்பகல் பெய்த கடும் மழை காரணமாக மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இரவில் விழுந்த மரங்களை அகற்றுவது மிகவும் ஆபத்தானது என்பதால், இரவு முழுவதும் சாலை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஒத்துழைப்புடன் நாளை (14) மரங்கள் அகற்றப்பட்டு வீதி புனரமைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





பசங்க பட நடிகர் ஜீவாவா இது, இப்போது அவர் ஒரு பிரபல கம்பெனியின் CEO... இந்த விஷயம் தெரியுமா? Cineulagam

4 நாட்களில் வேறலெவல் வசூல் வேட்டையில் ரஜினியின் கூலி... தமிழகத்தில் மட்டும் எவ்வளவு தெரியுமா? Cineulagam

கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
