கனடாவின் லவால் மாநகரசபையில் தமிழ் இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றது திட்டமிட்ட இனப்படுகொலை என கியூபெக் மாகாணத்தின் லவால் மாநகரசபை தீர்மானம் நிறைவேறியுள்ளது.
லவால் மாநகர சபையின் அமர்வு புதன் கிழமை நடைபெற்ற போது உறுப்பினர்களின் ஆதரவுடன் இத்தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.
கியூபெக் மாகாணத்தின் லவால் மாநகர சபையில் தமிழ் இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானத்துக்கான முதலாவது முன்மொழிவு கடந்த ஜூன் 7ம் திகதியன்று சபையில் இடம் பெற்று, தீர்மானம் தொடர்பான தகவல் அடங்கிய நகல் மாநகர சபையின் அனைத்து கட்சிகளுக்கும் வழங்கப்பட்டது.
அன்றைய அமர்வின்போது இனப்படுகொலை இடம் பெற்றமை தொடர்பாக கனடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் லவால் மாநகர சபையில் வரவேற்கப்பட்டது.
அதனை தொடர்ந்து லவால் மாநகர சபையின் எதிர்க்கட்சியான அக்சன் லவால் சார்பில் ''சொமெடி'' உறுப்பினர் அக்லியா ரெப்ளக்கிஸ் அவர்கள் தமிழ் இனப்படுகொலை தொடர்பான சிறப்பு அறிக்கையினை வாசித்தார்.
படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது
இலங்கை அரசால் தொடர்ச்சியாக அநியாயமாக'' தமிழ் இனப்படுகொலை'' செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு லவால் மாநகர சபையின் உறுப்பினர்கள் மற்றும் லாவால் பொதுமக்களும் 2 நிமிடம் அஞ்சலி செலுத்தினர்.
அந்த நேரத்தில் லவால் மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசத்தின் நூற்றுக்கு மேற்பட்ட பல்வேறு இனமக்களும் பிரசன்னமாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று இடம்பெற்ற சபையின் அமர்வில் லவால் மாநகர சபையின் எதிர்க்கடசியான அக்சன் லாவல் சார்பில் ''சொமெடி '' உறுப்பினர் அக்லியா ரெப்ளக்கிஸ் தீர்மானத்தை சபையில் முன்மொழிந்தபோது லவால் மாநகர சபையின் அனைத்து உறுப்பினர்களின் வழிமொழிவுடன் ’’தமிழ் இனவழிப்புக்கு எதிரான பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தில் கனடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை போன்று இலங்கையில் தமிழர்கள் மீது நடைபெற்றது இனப்படுகொலை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது
இதனை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் லாவல் மாநகர சபை மே 18 தமிழ் இனவழிப்பு மாதமாக கடைபிடிக்கப்படுவதாகவும், தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானம் லவால் மாநகர சபையில் நிறைவேற்றப்படுவதற்கு கடந்த காலங்களில் கியூபெக் மாகாணத்தில் இயங்கி வருகின்ற தமிழ் அமைப்புகள் ஒற்றுமையாக செயல்பட்டதன் காரணமாக ஈழத்தமிழர்களின் நீதி வேண்டிய நெடும் பயணம் நேர்த்தியான பாதையில் பயணிப்பதற்கு இந்த தீர்மானம் ஒரு எடுத்து காட்டாக இருக்கின்றது என்பது குறிப்பிடதக்கது.
இந்த வரலாற்று தீர்மானத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு நேர்த்தியாக தொடர்ந்து கடுமையாக உழைத்த கியூபெக் மாகாணத்தில் இயங்கி வருகின்ற அணைத்து தமிழ் அமைப்புகள், தமிழ் அரசியல் செல்பாட்டாளர், தமிழ் ஊடகங்கள் பாராட்டுக்குரியவர்கள்.
குறிப்பாக இவ்வாறான முக்கியத்துவம் வாய்ந்த அரசியல்
முன்நகர்வுகளை கனடிய நாடாளுமன்றம் மற்றும் லவால் மாநகர சபையிலும் சிறப்பாக
முன் நகர்த்துவதற்கு தொடர்ந்து உழைத்த கியூபெக் தமிழ் சமூக மையத்தின்
செயல்பாடுகள் வரவேற்கத்தக்கது என்பது குறிப்பிடத்தக்கது.