சஜித் பிரேமதாசவின் கட்சி ஆதரவாளர் கைது
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) ஆதரவாக விநியோகிக்கப்பட்ட தேர்தல் பிரசார அட்டையை பெற மறுத்த வர்த்தகர் ஒருவரை தாக்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், நாவலப்பிட்டி, பவ்வாகம பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர், என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தாக்குதல் சம்பவமானது, நேற்று முன்தினம் (15.09.2024) நாவலப்பிட்டியில் இடம்பெற்றுள்ளது.
தாக்குதல் சம்பவம்
கைக்கடிகாரங்களை பழுதுபார்க்கும் விற்பனை நிலையம் ஒன்றிற்குள், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளரல் விநியோகிக்கப்பட்ட கையேட்டை அங்கிருந்த ஒருவர் வாங்க மறுத்துள்ளார்.
இந்நிலையில் கோபமடைமந்த, ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர் குறித்த நபரை தாக்கியுள்ளதுடன் அச்சுறுத்தும் காணொளி அங்கிருந்த சிசிரிவி கருவியில் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து அந்த நபர் நாவலப்பிட்டி பொது வைத்தியசாலை அனுமதியாகியுள்ளதோடு பொலிஸ் நிலையத்தில் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |