யாழில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை: கட்சி முக்கியஸ்தர் கைது (Video)
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வத்திராயன் பகுதியில் சுமார் 600 லிட்டர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்ற பொருட்கள் என்பன மருதங்கேணி பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் (08.09.2023) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சந்தேக நபர் கைது
மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வத்திராயன் கிராமத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று இயங்கி வருவதாக மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று இரவு குறித்த உற்பத்தி நிலையம் சுற்றி வளைக்கப்பட்டது.
இதன்போது மருதங்கேணி பொலிஸார் நான்கு கொள்கலன்களில் கோடா 600 லீட்டருக்கு மேற்பட்ட கசிப்பு வடிப்பதற்கு தேவையான கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படும் பொருட்கள் என்பனவற்றை கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக மருதகக்கேணி பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சமபவத்தில் கைது செய்யப்பட்டவர் கட்சி ஒன்றின் முக்கியஸ்தர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இனியா செய்த விஷயம்.. ஷாக் ஆன வில்லன்! நம்பர் 1 ட்ரெண்டிங்கில் பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ Cineulagam

1000 ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீர் பிரச்சினையில்.. - டிரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு News Lankasri
