தேர்தல் விஞ்ஞாபனங்கள் குறித்து கட்சிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்
நடைபெறவிருக்கும் தேர்தலுக்கு முன்னதாகவே தங்களது தேர்தல் விஞ்ஞாபனங்களை விளம்பரப்படுத்த வேண்டும் என அனைத்து கட்சிகளுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை அமைப்பான பெப்ஃரல் (PAFFREL) அமைப்பினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த அமைப்பு தெரிவித்துள்ளதாவது,
"நாட்டில் சிறந்த மற்றும் பொறுப்பான அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதற்காக அரசியல் கட்சிகள் எந்தவொரு தேர்தலாக இருந்தாலும் அதற்கு முன்னதாகவே தங்களது தேர்தல் விஞ்ஞாபனங்களை விளம்பரப்படுத்த வேண்டும்.
கொள்கை அறிக்கை
உண்மையில் தற்போது இலங்கையிலுள்ள கட்சிகள், தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக தான் தமது கொள்கை அறிக்கைகளை முன்வைக்கின்றன.
இதனால், பொதுமக்களுக்கு அவை குறித்து பயனுள்ள விவாதம் நடத்த வாய்ப்பில்லை.
தேர்தல் விஞ்ஞாபனங்கள் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே முன்வைக்கப்பட வேண்டும்.
ஆனால், வேட்புமனுக்கள் வழங்கப்பட்ட பின்னர் அவற்றை விளம்பரப்படுத்துவதே தற்போது நடைபெறுகின்றது" என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |