சமூக ஊடகங்களில் போலி விளம்பரம் : எச்சரித்த பேராதனை பல்கலைக்கழகம்
இணைய வழியில் இலவச பாடநெறிகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களை பேராதனை பல்கலைக்கழகம் நிராகரித்துள்ளது.
பேராதனை பல்கலைக்கழகத்தில், பல்வேறு பாட நெறிகள் இணைய வழியில் இலவசமாக கற்பிக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டது.
இவ்வாறு செய்யப்படும் விளம்பரங்கள் பேராதனை பல்கலைக்கழக இணைய தளத்திலிருந்து செய்யப்பட்டவை அல்ல என தெரிவிக்கப்படுகின்றது.
போலி செய்திகள்
பேராதனை பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணைய தளத்தில் இவ்வாறான இலவச கற்கை நெறிகள் பற்றிய எவ்வித தகவல்களும் வெளியிடப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான எவ்வித இலவச கற்கை நெறிகளும் ஆரம்பிக்கப்படவில்லை எனவும் தற்போதைக்கு அவ்வாறு ஆரம்பிக்கும் உத்தேசம் இல்லை எனவும் பல்கலைக்கழகத்தின் பிரதி துணை வேந்தர் பேராசிரியர் டெரென்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார்.
எனவே இவ்வாறான போலி செய்திகளை கண்டு ஏமாற வேண்டாம் என அவர் மக்களிடம் கோரியுள்ளார்.