கிளிநொச்சியில் பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கை ஆரம்பம்
கரைச்சி பிரதேச சபை எல்லைக்குள் குறிப்பாக நகரத்திலும் நகரத்தை சூழ்ந்துள்ள பகுதிகளிலும் படர்ந்து உள்ள மண்வளத்தை உறிஞ்சி அழிக்கும் பாத்தீனியத்தை அழித்து ஒழிப்பதற்கான தீர்மானம் கரைச்சி பிரதேச சபையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி சூழலில் காணப்படுகின்ற பார்த்தீனிய செடிகளை வேருடன் பிடுங்கி பிரதேச சபை அலுவலகத்தில் கையளிக்கின்ற ஒவ்வொரு கிலோ பாத்தீனியத்துக்கும் இருநூறு ரூபா வழங்கப்படும் .இந்நடவடிக்கையானது.
இன்று தொடக்கம் ஆரம்பிக்கப்படுகிறது. பிடுங்குகின்ற போது கைகளில் கையுறை அல்லது ஷெப்பிங் பை போன்ற பாதுகாப்பு கையுறைகளை அணிந்து அதனை அகற்றுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
வேருடன் கொண்டு வரப்படுகின்ற செடிகளுக்கு மாத்திரமே பணம் வழங்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் தெரிவித்தார். குரல் பதிவும் உள்ளது. இன்றைய தினம் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர்,செயலாளர் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam