விடுதலைப்புலிகளின் மாவீரர் நினைவுக்கூரலும், ஜேவிபியின் நினைவுக்கூரலும் ஒன்றல்ல- பொன்சேகா நாடாளுமன்றில் வலியுறுத்தல் (VIDEO)
இலங்கையின் படையினர் அரசியல்வாதிகளை பாதுகாக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடாது என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அமரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பாதுகாக்கவேண்டிய அவசியம் இல்லை என்று அமொிக்க இராணுவத்தளபதி கூறியிருந்தமையை சுட்டிக்காட்டியே அவர் இதனை இன்று நாடாளுமன்றில் குறிப்பிட்டார்
இந்தநிலையில் 1980 ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் 2500 பேர் இந்தியாவின் 75 ஆயிரம் படையினரை எதிர்த்து சண்டையிட்டனர்.
எனினும் 75 ஆயிரம் இந்திய படையினரால் 2500 விடுதலைப்புலிகளை கட்டுப்படுத்தமுடியவில்லை. .
இது இலங்கையர்கள் என்ற வகையில் பெருமைப்படவேண்டிய விடயம் என்று சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.
நாட்டில் இன்று இருக்கும் படையினருக்கு வாரம் ஒன்றுக்கு ஒருமுறை மாத்திரமே கோழி இறைச்சி வழங்கப்படுகின்றது.
காலையில் பால் தேனீருக்கு பதிலாக வெறும் தேனீர் மாத்திரமே வழங்கப்படுகின்றன.
இது தொடர்பில் படையினர் அதிருப்தியில் இருப்பதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.
இதற்கு நிதியமைச்சே பொறுப்பேற்கவேண்டும்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் தினத்தை நிறுத்தவேண்டும் என்று சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.
இறந்தவர்களை நினைவுக்கூருவதாக கூறி பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாடப்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று அவர் குறிப்பிட்டார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் தினமும் ஜேவிபியின் கார்த்திகை வீரர்கள் தினமும் ஒன்றல்ல.
ஜேவிபி நாட்டை பிரிக்கும் போராட்டத்தில் ஈடுபடவில்லை. எனவே அவர்களுக்கு அந்த உாிமையுள்ளது.
வடக்கில் உள்ள சில அரசியல் தலைவர் இந்த மாவீரர் தின நிகழ்வுகளுக்கு ஆதரவளித்து, தென்னிலங்களை மக்களின் அதிருப்தியை உருவாக்குவதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழவிடுதலைப்புலிகள் என்ற அடிப்படையில் சிறையில் உள்ளவர்களை விடுவிக்கும் நடவடிக்கையின்போது தம்மை கொலை செய்ய வந்த மொரிஸ் என்பவரை விடுதலை செய்யுமாறு சரத் பொன்சேகா நீதியமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.
இலங்கையின் படையினரில் தவறு செய்பவர்களுக்கு தண்டனை வழங்கவேண்டும்.
அவர்களுக்கு மன்னிப்பு வழங்கக்கூடாது ஜெகத் ஜெயசூரிய ,கபில ஹெந்தவித்தாரண போன்றோர் தவறு செய்துள்ளார்கள் அவர்களுக்கு தண்டனை வழங்குவதன் மூலம் ஏனைய படையினரின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை தவிர்க்கமுடியும்.
கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரண்ணாகொட 11 இளைஞர்களை கடத்திச்சென்று கொலை செய்துள்ளார்
கொலை செய்தவர்களை கொலை செய்து கடலில் வீசியதாக தகவல்கள் உள்ளன.
எனவே வசந்த கரணாகொட போன்றவர்களை காப்பாற்றவேண்டாம் என்று பொன்சேகா கேட்டுக்கொண்டார்
போர் இடம்பெற்றமையை நினைவுப்படுத்தும் முகமாக போர் சின்னமாக”சந்தஹிரு சாய” என்ற நினைவுச்சின்னத்தை உருவாக்கக்கூடாது.
அதனை சமாதானத்தை ஏற்படுத்திய சின்னமாக மாற்றவேண்டும் என்றும் சரத் பொன்சேகா கேட்டுக்கொண்டார்.
இதேவேளை சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்படுபவர்கள் பொலிஸாரால் கொலை செய்யப்படுவது நிறுத்தப்படவேண்டும் என்றும் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.

சீனா, பாகிஸ்தானுக்கு பாரிய எச்சரிக்கை - இந்தியா உருவாக்கும் அதிநவீன Pinaka-IV ரொக்கெட் அமைப்பு News Lankasri

ஒரே ஒரு மாணவன் மற்றும் ஒரே ஒரு ஆசிரியருக்காக செயல்படும் அரசு பள்ளி.., எந்த மாநிலத்தில்? News Lankasri
