தம்மை வருத்தி ஏனையோருக்கு குடிநீரை வழங்கும் பெருந்தோட்ட மக்கள்
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கி அதற்கு விசேட வரிச்சலுகை வழங்குதற்கான யோசனைக்கு மஹிந்த ராஜபக்ச தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிராக வாக்களிக்கவில்லை.
எனவே அந்த துறைமுக விற்பனைக்கு மஹிந்த ராஜபக்ச தரப்பினரும் பொறுப்பேற்கவேண்டும் என்று ஜேவிபி தெரிவித்துள்ளது.
அன்று அதற்கு எதிராக ஜேவிபி மாத்திரமே வாக்களித்ததாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இன்று நாடாளுமன்ற விவாதத்தின்போது தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையின் சமையலறையில் பாதுகாப்பு இல்லாமல் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தமுடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இலங்கையில் 12.5 கிலோ கிராம் நிறைகொண்ட எரிவாயு கொள்கலன்களில் 9.5 நிறை கொண்ட எரிவாயு மாத்திரமே நிரப்பப்பட்டது
இதன் காரணமாக கொள்கலன்களில் வெற்று இடம் அதிகமானது. அத்துடன் புரொய்பெய்ன் பியூட்டன் கலவைகளும் மாற்றப்பட்டபோது கொள்கலன்களில் உள்ள வெற்று இடங்களின் ஊடாக அழுத்தம் அதிகரித்து கொள்கலன்களில் கசிவு ஏற்படுகிறது.
கொள்கலன்களின் கலவை மாற்றப்பட்டு நிறையும் குறைக்கப்பட்டபோது, அதற்கு ஈடு செய்யும் வகையில் ரெகுலேட்டர்களும் இணைப்புக்குழாய்களும் மாற்றப்பட்டிருக்க வேண்டும்
எனினும் அது பூர்த்தி செய்யப்படாத காரணத்தினாலேயே இன்று எரிவாயு கொள்கலன்களில் வெடிப்புகள் ஏற்படுகின்றன என்று விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் ஜனாதிபதி உடனடியாக செயற்படாமல், இரண்டு வாரங்களில் அறிக்கையை பெற்று தீர்வைக் கொடுப்பதாக கூறும்போது அதற்குள் பல இடங்களில் எரிவாயு வெடிப்புக்கள் பரவிவிடும்.
எனவே இதனை விடுத்து உடனடியாக பாவனையில் உள்ள எரிவாயு கொள்கலன்களை திரும்பப்பெற்று அதற்கு பதிலாக புதிய கொள்கலன்களை விநியோகிக்கவேண்டும் என்று விஜித ஹேரத் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை உரிய வேதனம் கிடைக்காமல், கோதுமா மாவின் விலையதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள, நாட்டுக்கு அதிக அந்நிய செலவாணியை பெற்றுக்கொடுக்கும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு குடிநீரையாவது பெற்றுக்கொடுக்கவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
இன்று பெரும்பாலான தோட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வசதி செய்துக்கொடுக்கப்படாதபோதும் பெருந்தோட்ட பகுதிகளில் இருந்து ஏனைய இடங்களுக்கு குடிநீர் திட்டங்கள் கொண்டு செல்லப்படுகின்றன என்றும் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 7 மணி நேரம் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
