கோட்டாபயவை சிங்கள மக்கள் தூசிப்பார்கள்! வணக்கத்துக்குரிய ஜோசப் ராயப்பின் தீர்க்க தரிசனம் (Video)
மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் வணக்கத்துக்குரிய ராயப்பு ஜோசப் இன்று தீர்க்கத்தரினமான கூறிய கருத்தே இன்று நாட்டில் நடந்துக்கொண்டிருக்கிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், மன்னார் முள்ளிக்குளம் பிரச்சினை தொடர்பில் பாதுகாப்பு செயலாளராக இருந்தவேளையிலேயே கோட்டாபய ராஜபக்சவை முன்னாள் ஆயரும் தாமும் சந்திக்க சென்றதாக செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.
தமது சந்திப்புக்காக பிற்பகல் 3மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தபோதும் இரவு 7 மணிக்கே சந்திப்புக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
எனினும் கோட்டாபய ராஜபக்ச, ராயப்பு ஜோசப் ஆண்டகையை கருத்திற்கொள்ளாமல் நடந்து கொண்டார். இதன்போது “எனது மக்களின் பிரச்சினைகளை பேச வந்தபோது நீங்கள் அதனை கருத்திற்கொள்ளவில்லை. நான் உயிருடன் இருந்தாலும் இல்லையென்றாலும் நிச்சயமாக சிங்கள மக்கள் உங்களை தூசிப்பார்கள்" என்று கூறினார்.
இது அது உண்மையாகியிருக்கிறது என்று செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri