நாட்டை ஆட்சி செய்வது கோட்டாபய-ரணில் அல்ல! கறுப்பு நிற குருவி! நாடாளுமன்றில் வெளிப்படுத்திய ரோஹினி!

By Amal May 17, 2022 05:53 AM GMT
Report

நாட்டில் இன்று கோட்டாபய ராஜபக்ச அல்லது ரணில் விக்கிரமசிங்க ஆட்சி செய்யவில்லை

எனினும் கறுப்பு நிற குருவியே இன்று நாட்டை ஆட்சி செய்வதாக ஐக்கி்ய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரட்ன விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு நாடாளுமன்றின் பிரதிசபாநாயகர் பதவி வழங்கப்படவேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விரும்பியபோதும், அவருக்கு ஆதரவு வழங்குவதாக கூறிய பொதுஜன பெரமுனவினர் அந்த யோசனையை நிராகரித்துள்ளனர்.

இது பிரதமருக்கு ஏற்பட்ட முதலாவது தோல்வியாகும் என்று ரோஹினி கவிரட்ன குறிப்பிட்டார்.

நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, நாடு எதிர்கொள்ளும் ஆபத்தை உணர்த்தினார்.

எனினும் அது பிரதி சபாநாயகர் நிலை தொடர்பில் அவரின் விருப்பத்தை நிறைவேற்றமுடியாமல் போனமை குறித்து கவலை ஏற்பட்டுள்ளது என்றும் ரோஹினி தெரிவித்தார்.

இந்தநிலையில் நாட்டில், இளைஞர்களின் போராட்டம் நிறைவடையும் போது இந்த நாட்டின் சனத்தொகையில் 52 வீதம் மற்றும் வாக்காளர்களில் 56 வீதமான பெண்களுக்கு நாடாளுமன்றில் சபாநாயகர் அல்லது பிரதி சபாநாயகர் நிலை கிடைக்கும் வாய்ப்பு ஏற்படவேண்டும் என்று ரோஹினி கோரிக்கை விடுத்தார்.

ரோஹினி கவிரட்னவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பெண் ஒருவர் நாடாளுமன்ற பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்படாமை தொடர்பில் தம்மீது குற்றம் சுமத்தவேண்டாம் என்று குறிப்பிட்டார்.

தாம் ஆளும் கட்சியிலும் இல்லாமல் எதிர்கட்சியிலும் இல்லாமல், பாலம் ஒன்றின் ஆரம்பப் பகுதியில் இருப்பதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இலங்கையின் செனட் சபையின் தமது தாயாரின் மாமியாரான எட்லின் மொனமொரே பிரதி சபாநாயகராக பதவி வகித்தார் அதற்கு பின்னர் பெண் ஒருவர் சபாநாயகராகவோ அல்லது பிரதி சபாநாயகரகவோ தெரிவுசெய்யப்படவில்லை என்று ரணில் சுட்டிக்காட்டினார்.



சர்வ கட்சி அரசாங்கத்தின் கீழ் ஆரம்பமான முதல் நாடாமன்ற அமர்வில், விட்டுக்கொடுப்புக்கு தயாரில்லாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் இருந்து பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ச தெரிவுசெய்யப்பட்டார்.

முன்னதாக நாடாளுமன்ற அமர்வு இன்று ஆரம்பமானபோது, கடந்த நாடாளுமன்ற அமர்வில், பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அந்த நிலையில் இருந்து விலகியைதை அடுத்து, பிரதி சபாநாயகருக்கான தெரிவை சபாநாயகர் கோரினார்.

இதனையடுத்து, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ரோஹினி கவிரட்னவை பிரதி சபாநாயகராக, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிந்தார்

இதனையடுத்து ஆளும் கட்சியின் சார்பில் அஜித் ராஜபக்சவின் பெயர் முன்மொழியப்பட்டது.

இந்தநிலையில் வாக்கெடுப்பை நடத்துமாறு கோரப்பட்டது.

எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஆளும் கட்சியில் இருந்து விலகிய விமல் வீரவன்ச உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

நாடு இருக்கும் நிலையில் பிரதமரும் எதிர்கட்சி தலைவரும் இணைந்து இதில் தீர்மானம் ஒன்றை எட்டவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனை மீறி வாக்கெடுப்பு நடத்தப்படுமானால், தமது உறுப்பினர்கள் வாக்குகளை நிராகரிப்பார்கள் என்றும் அவர் எச்சரித்தனர்.

இதனையடுத்து முன்மொழியப்பட்டவர்களில் இருவரில் ஒருவர் போட்டியில் இருந்து விலகிக்கொள்ள சபாநாயகர் அவகாசத்தை வழங்கினார்.

எனினும் இதற்கு இரண்டு தரப்பிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.

இதன் காரணமாக வாக்கெடுப்புக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதன்படி வாக்கெடுப்பு தற்போது நடத்தப்பட்டது.

வாக்கெடுப்பின்படி அஜித் ராஜபக்சவுபுக்கு 109 வாக்குகளும், ரோஹினி கவிரட்னவுக்கு 78 வாக்குகளும் கிடைத்தன. 23 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

இதனையடுத்து பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ச தெரிவுசெய்யப்பட்டார்.



நாடாளுமன்ற அமர்வு இன்று எதிர்ப்புக்களுக்கு மத்தியில் ஆரம்பமானது.

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளையின் மரணம் குறித்து நாடாளுமன்றம் தமது கவலையை வெளியிடுவதாக சபாநாயகர் அறிவித்தவேளையில், ஆளும் கட்சியின் உறுப்பினர்கள், அந்த அறிக்கை தொடர்பில் தமது அதிருப்தியை வெளியிட்டனர்.

நாட்டை ஆட்சி செய்வது கோட்டாபய-ரணில் அல்ல! கறுப்பு நிற குருவி! நாடாளுமன்றில் வெளிப்படுத்திய ரோஹினி! | Parliment Session On Political Issue

அமரகீர்த்தி அத்துகோரளவின் கொலை என்று சபாநாயகர் அறிவிக்கவேண்டும் என்று அவர்கள் கோசமெழுப்பினர்.

இதனையடுத்து ஆளும் கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையின்படி, சபாநாயகர், அமரகீர்த்தி அத்துகோரளையின் கொலை என்ற சொல்லை இணைத்து தமது கவலையை வெளியிட்டார்


மரண அறிவித்தல்

கரம்பொன், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கொழும்பு, Ilford, United Kingdom, Mundesley, United Kingdom

25 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

கட்டுவன், Bondy, France

06 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US