பெருந்தோட்ட தொழிலாளர் சம்பள வழக்கு! ஜூன் 30ஆம் திகதி தீர்ப்பு!
ஜூன் 30ஆம் திகதி தீர்ப்பு
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் பெருந்தோட்ட நிறுவனங்கள் தாக்கல் செய்துள்ள வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதியன்று வழங்கப்படவுள்ளது இந்த தீர்ப்பு பெரும்பாலும் தமக்கு சார்பாகவே இருக்கும் என்று நம்பிக்கை கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், 22 பெருந்தோட்ட நிறுவனங்கள் சார்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சம்பள நிர்ணய சபையை கூட்டவேண்டும்
வாழ்க்கை செலவுக்கு ஏற்ப சம்பளம் உயர்த்தப்படவேண்டும் என்ற அடிப்படையில் சம்பள நிர்ணய சபையை கூட்ட வேண்டும் என்று அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் கோரியுள்ளதாக ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் பெருந்தோட்டத்துறையின் தரிசு காணிகள், பெருந்தோட்ட மக்களுக்கே பயிரிட வழங்கப்படவேண்டும். வெளியாருக்கு அவை வழங்கப்படக்கூடாது என்றும் ஜீவன் கேட்டுக்கொண்டார்.
ஜனாதிபதியுடனான சந்திப்பை தொடர்ந்து ஜீவனின் அதிரடி முடிவு

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
