நாட்டுக்கு சுமையாக மாறியுள்ள ஸ்ரீலங்கன் விமான சேவை!
ஸ்ரீலங்கன் எயார்
ஸ்ரீலங்கன் விமான சேவை நாட்டின் பொருளாதாரத்துக்கு சுமையாக மாறியிருப்பதாக நாடாளுமன்ற கோப் குழுவின் தலைவரான சரித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தொடர்பான கோப் குழுவின் அறிக்கையை சமர்ப்பித்த அவர், இதனை குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கன் விமானச் சேவையின் தற்போதைய செயற்பாடு மற்றும் கடந்த கால செயற்பாடுகள் நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளன.

சரித்த ஹேரத்
எனவே இது தொடர்பில் நாடாளுமன்றம் உரிய கவனத்தை செலுத்தவேண்டும் என்று சரித்த ஹேரத் கேட்டுக்கொண்டார்.
அரச சொத்தான ஸ்ரீலங்கன் விமானசேவையின் செயற்பாடுகள் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுக்களின் மூலம், அந்த விமானசேவையின் செயற்பாடுகள் நாட்டின் பொருளாதாரத்துக்கு பாரமாகியுள்ளதை கண்டறிய முடிந்துள்ளது என்று சரித்த ஹேரத் குறிப்பிட்டார்.

தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri
தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் - 160 கிலோ எடையை 75 கிலோவாக குறைத்த மகன் News Lankasri