முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களை இலங்கை நாடாளுமன்றில் நினைவேந்திய கஜேந்திரன்!
தமிழ் தேசியத்தின் மீது சிங்கள பௌத்த பேரினவாதிகள் நடத்திய இனவழிப்பு போரில் இறந்தவர்களை தாம் அஞ்சலிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இன்று இலங்கை நாடாளுமன்றில் தெரிவித்தார்.
இனப்படுகொலைக்கு காரணமானவர்கள், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்படவேண்டும் என்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என்றும் கஜேந்திரன் குறிப்பிட்டார்.
ரணில் விக்ரமசிங்க தற்போது பிரதமரான வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார் என்றும் மகிந்த ராஜபக்சவினாலேயே, ரணில் விக்ரமசிங்க வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழர்களிடம் இருந்து தலைவர்களை தேடாது, அவர்களிடம் இருந்து முகவர்களை தேடுவதே இதுவரை இனப்பிரச்சினை தீர்க்கப்படாமைக்கான காரணம் என்றும் கஜேந்திரன் தெரிவித்தார்.
தனது சொந்த ஊரில் புதிய வீடு கட்டியுள்ள எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகர் விபுணன்.. இதோ போட்டோஸ் Cineulagam
பிக் பாஸ் வீட்டிற்குள் 24 மணி நேரம் தங்கும் போட்டியாளரின் பெற்றோர்! இந்த வாரம் வெளியேறுவது யார்? Manithan