கோட்டாபயவுக்கு எதிரான யோசனைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு!- ஜீவன் தொண்டமான்
நாட்டின் இன்றைய நிலையில் பிரதமர் ஒருவர், நாட்டை மீட்க முன்வந்துள்ளமையானது பாராட்டத்தக்கது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், பிரதமர் நேற்றைய உரையின்போது பிரதமர் நாட்டின் உண்மை நிலையை கூறியமையானது, இனிப்பான பொய்யை விட, கசப்பான உண்மை பெரியது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இன்று ஜனாதிபதிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட யோசனைக்கு தாம் ஆதரவாக வாக்களித்ததாக ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டார்.
இந்த யோசனை அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான யோசனை அல்ல என்று குறிப்பிட்ட அவர், ஜனாதிபதிக்கு எதிரான கருத்தை வெளிப்படுத்தற்காகவே இந்த யோசனை நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரனால் கொண்டு வரப்பட்டதாக ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டார்.
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri