மின்சக்தி தொடர்பான திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றம்! எதிர்க்கட்சியின் திருத்தம் நிராகரிப்பு
மின்சக்தி சட்டமூலம் நிறைவேறியது
நாட்டில் 70 வீதம் என்ற அளவில், புதுப்பிக்கப்பட்ட மின்சார உற்பத்திகளை மேற்கொள்ளவேண்டும் என்று அடிப்படையில் முன்வைக்கப்பட்ட மின்சக்தி திருத்தச்சட்ட மூலம் நாடாளுமன்றில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 36 வாக்குகள் செலுத்தப்பட்டன. 13 பேர் வாக்களிக்கவில்லை.
10 மெகாவோட்ஸூக்கு அதிகமான மின்சார உற்பத்தி
இதன்படி 10 மெகாவோட்ஸூக்கு அதிகமான மின்சார உற்பத்தியை மேற்கொள்ளும் புதுப்பிக்கப்பட்ட திட்டங்களுக்கு கேள்விப்பத்திரங்களை கோரவேண்டும் என்று எதிர்கட்சி முன்வைத்த யோசனைகளுக்கு அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது.
அத்துடன் 100 மெகாவோட்ஸூக்கு அதிக உற்பத்தியை மேற்கொள்ளும் திட்டங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்துக்கு தெளிவுப்படுத்தவேண்டும் என்று ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் காஞ்சன ஜெயசேகர தெரிவித்தார்.
ரணிலுடன் இணக்கம்
முன்னதாக இந்த யோசனைகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து சாதகமான பதில் கிடைக்காதபோதும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது இதற்கான இணக்கம் ஏற்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தார் என்பது குறிப்பி்டத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 8 நிமிடங்கள் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
