காற்றலை மின்சார உற்பத்தியின் இலாபம் வடக்கின் அபிவிருத்திக்கு பயன்படவேண்டும்- சித்தார்த்தன்
காற்றலை மின்சார உற்பத்தி மையங்களை வடக்கில் அமைக்கின்றபோது, இந்த மையங்களில் இருந்து கிடைக்கும் இலாபங்களில் ஒரு பங்கு, வடக்கின் அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படவேண்டும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு கோரியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
புலம்பெயர் தமிழர்களின் உதவிகளை பெற்றுக்கொள்ளவேண்டுமானால், தமிழர் பகுதிகளில் மேற்கொள்ளப்படுகின்ற காணி அபகரிப்புக்கள் நிறுத்தப்படவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
கடந்த சர்வக்கட்சி மாநாட்டின்போது, இந்த விடயம் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்ட நேரத்தில், இன்றும் காணி அபகரிப்புகள் இடம்பெறுகின்றமை தமக்கு தெரியாது என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
எனினும் இன்றும் அந்த காணி அபகரிப்புக்கள் இடம்பெறுவதாக சித்தார்த்தன் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 2 நிமிடங்கள் முன்

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
