கோட்டாபயவுக்கு ஆளும் கட்சிக்குள்ளும் அழுத்தம்
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜேவிபி போன்ற கட்சிகளை இணைத்து அனைத்துக்கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காக அரசாங்கம் முன்னெடுப்புக்களை மேற்கொள்ளவேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி எஸ் குமாரஸ்ரீ இது தொடர்பில் வலியுறுத்தலை விடுத்துள்ளார்
பொதுமக்களின் எழுச்சி தொடர்பில் கருத்துரைத்த அவர், அரசாங்கம் என்ற வகையில் இந்த விடயத்தில் கண்மூடிக்கொண்டிருக்கமுடியாது
எனவே அனைத்துக் கட்சி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் அரசாங்கம் எதிர்கட்சிகளுடன் பேச்சு நடத்தி அதனை நடைமுறைப்படுத்தவேண்டும்.
அதற்கான பொறுப்பு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு இருப்பதாக ஆளும் கட்சியின் உறுப்பினர் கே.பி எஸ் குமாரஸ்ரீ தெரிவித்துள்ளார்.



