அலி சப்ரி, கிரிக்கெட்டில் நைட்வொட்ச்மேன் அல்ல! வோட்டர்ஸ் அன்ட் கேட்டின் நைட்வொட்ச்மேன் - ரணில் விக்கிரமசிங்க (Video)
கஸ்டமான பணியை முன்னெடுத்துள்ள நிதியமைச்சர் அலி சப்ரி, தம்மை “நைட் வோட்ச்மேன்” என கூறியது தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தமது கருத்ததை வெளியிட்டுள்ளார்.
“நைட் வோட்ச்மேன்” என்பது கிரிக்கெட்டில் உள்ள நிலை என்பதை விட நிதியமைச்சர் வோட்டர்ஸ் அன்ட் கேட்டின் நைட்வோட்ச் மேன் என்பதை ரணில் நினைவுப்படுத்தினார்.
நைட் வோட்ச்மேன் ஜனநாயக கட்சியின் தலைமையகம் உடைக்கப்பட்டதை தெரியப்படுத்திமை காரணமாகவே உப ஜனாதிபதியும், ஜனாதிபதியும் பதவி விலகினர்.
எனவே அலி சப்ரி அதனையா செய்யப்போகிறார்? என்று ரணில் கேள்வி எழுப்பினார்.
இந்தநிலையில் நிவாரண உதவிகள் அனைத்தும் தமது ஆட்சியின் போது அபிவிருத்திக்கு பயன்படுத்தப்பட்டதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய வரி குறைப்பிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் காரணம் இல்லை, அதற்கு தனியார் துறையினரே காரணம் என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இந்தநிலையில் அதிகாரிகளின் செயற்பாடுகளை பார்த்துக் கொண்டிருக்காமல், முழுப் பொறுப்புகளையும் நாடாளுமன்றுக்கு கொண்டு வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தாம் முன்வைத்த யோசனைகளுக்கு உரிய கவனம் செலுத்தப்படாமையால், கோட்டாபயவிற்கு பதிலாக தாமே வீட்டுக்கு செல்ல வேண்டியேற்பட்டதாக ரணில் குறிப்பிட்டார்.
இதேவேளை நாட்டின் அரசியல் பிரச்சினைக்கு அரசியல் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். ஜனாதிபதி அல்லது பிரதமர் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கைகள் எதிர்கட்சியினால் விடுக்கப்பட்டுள்ளன.
இந்த விடயத்தில் இரண்டு கிழமைகளுக்குள் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தநிலையில் ஒன்றுபட்டு செயற்படக்கூடிய செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று ரணில் விக்ரமசி்ங்க கேட்டுக்கொண்டார்.



