மிஸ்டர் சுத்தம், மிஸ்டர் அசுத்தத்துடன் ஒன்றாக அமர முடியுமா? ரணிலிடம் கேள்வியும், அவரின் பதிலும்
மிஸ்டர் க்ளீன்(Clean),மிஸ்டர் டேர்ட்டி(Dirty)
மிஸ்டர் க்ளீன்(Clean),மிஸ்டர் டேர்ட்டியுடன்(Dirty)செயற்பட முடியுமா என்று இன்று நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை மிஸ்டர் கிளீன்( சுத்தமானவர்) என்று குறிப்பிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் மிஸ்டர் டேர்ட்டி (அசுத்தமானவர்) என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை குறிப்பிட்டார்.
கப்பம் பெற்றமை தொடர்பில் நீதிமன்றத்தினால், குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டனை பெற்றுள்ள அரசாங்கத்தின் பிரதம அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்கவுடன் எவ்வாறு செயற்படமுடியும் என்று அவர் ரணிலிடம் கேள்வி எழுப்பினார்.
நீதிமன்ற தீர்ப்பு
இதற்கு பதிலளித்த, ரணில் விக்ரமசிங்க, நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளபோதும் அது தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேன்முறையீட்டை செய்யமுடியும்.
இந்த மேன்முறையீட்டின்போது அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டால், அவர், தமது பக்கத்தில் இருக்கும் ஆசனத்தில் அமரமுடியாது என்று குறிப்பிட்டார்.
அத்துடன் ஏற்கனவே தாம் ஆட்சியில் இருந்தபோது, நீதிமன்றில் தண்டனை பெற்றவர்களுடன் தாம் அமர்ந்திருந்த பழக்கம் தமக்கு இருப்பதாகவும் ரணில் தெரிவித்தார்.
பசிலின் மல்வானை வீடு
இதேவேளை மல்வானை வீடு தொடர்பில், பசில் ராஜபக்ச மீதான குற்றச்சாட்டு, நீக்கப்பட்டுள்ளமைக்கு பின்னால், சட்டமா அதிபர் திணைக்களத்தின் தவறான செயற்பாடுகள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குறிப்பிட்டார்.
எனவே இந்த விடயத்தில் பசில் ராஜபக்சவின் மீது மீண்டும் மேன்முறையீடு செய்யப்படுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ரணில் விக்ரமசி்ங்க, அது தொடர்பில் சட்டத்தில் இடமிருந்தால், சட்டமா அதிபர் திணைக்களம் மேன்முறையீட்டை மேற்கொள்ளும் என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam
