நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தை பணியிலிருந்து நீக்க முயற்சிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஸானி அனுசா ரோஹதீர உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் சிலரை பணியிலிருந்து நீக்க திட்டமிடப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிராம்னாத் தொலவத்த இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
முக்கிய அரச பதவி
நாடாளுமன்றின் செயலாளர் நாயகம் மற்றும் பிரதி செயலாளர் நாயகம் பதவி வகித்து வரும் இருவரை இந்த அரசாங்கம் பதவிகளிலிருந்து நீக்க முயற்சித்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த அதிகாரிகள் அனைவரும் பூரண தொழில்சார் தகமை உடையவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் தங்களுக்கு நெருக்கமானவர்களை நாடாளுமன்றின் முக்கிய அரச பதவிகளில் அமர்த்தும் நோக்கில் இவ்வாறு முயற்சிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தொலவத்த தெரிவித்துள்ளார்.

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
