வீதியில் இறங்கி போராடும் பொதுமக்கள் நகரங்களை மூடும் நிலை! நாமலிற்கு எச்சரிக்கை (Video)
வீதியில் இறங்கி போராடும் பொதுமக்கள் நகரங்களை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலைக்கு நாமல் ராஜபக்ச உட்பட்ட முன்னாள் அமைச்சர்கள் பொறுப்புக் கூறவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், அன்று தாம் இன்றைய நிலை ஏற்படும் என்று கூறியபோதும் அசிங்கமான கப்புட்டாவை அழைத்து வந்ததன் பிரதிபலனே இன்று நாட்டு மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே பிரதமர் உட்பட்ட முழு அமைச்சவையும் பதவி விலகி இடைக்கால நிர்வாகம் அமைக்கப்படவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை நாடாளுமன்றில் இன்று புதிய அமைச்சர்கள் முதலாவது ஆசன வரிசையிலும், முன்னாள் அமைச்சர்கள் இரண்டாவது வரிசையிலும் அதற்கு பின்னால் ராஜாங்க அமைச்சர்களும் அமர்ந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் துசார இந்துனில் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் தாம் ஆடைகளை அணிந்துக்கொள்ளும் வரை குழந்தையை பார்த்துக்கொள்ளுமாறு கூறுவதை போன்று இன்று முன்னாள் அமைச்சர்கள், புதியவர்களுக்கு இடமளித்து பின்னால் இருந்து பார்த்துக்கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri