முன்னையவர்களுக்கு இல்லாத முதுகெலும்பு கோட்டாபயவுக்கு இருக்கிறது
தாம் தவறு செய்தமையை ஏற்றுக்கொள்ளும் வகையில் ஜனாதிபதிக்கு முதுகெலும்பு இருப்பதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
இரசாயன பசளை இறக்குமதிகளை ரத்துச்செய்தமை தொடர்பில் ஜனாதிபதி மன்னிப்பு கோரியமை தொடர்பிலேயே இந்த கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
மத்திய வங்கி மோசடி மற்றும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பாக மன்னிப்பை கோர முன்னைய அரசாங்கத்துக்கு முதுகெலும்பு இருக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது விவசாயிகளுக்கு நட்டஈடுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மஹிந்தானந்த அலுத்கமமே இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது குறிப்பிடடுள்ளார்.
நாட்டில் இன்று ஏற்பட்ட நிலைமையை 225 பேரும் இணைந்தே தீர்க்கவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.



