ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இன்றும் நாளையும் நாடாளுமன்றில் விவாதம்
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் சம்பவம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் சபை ஒத்திவைப்பு நாடாளுமன்ற விவாதம் இன்றைய தினமும் நாளைய தினமும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியினால் இந்த யோசனை சமர்ப்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து குறித்த பிரேரணை தொடர்பில் இரண்டு நாள் விவாதம் நடத்துவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

நாடாளுமன்றிற்கு வரும் பாதுகாப்பு பிரிவின் பிரதானிகள்
இந்த நிலையில் உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வெளியிட உள்ளனர்.
இந்த விவாதத்தை பார்வையிடுவதற்காக பாதுகாப்பு பிரிவின் பிரதானிகள் உள்ளிட்ட பலர் நாடாளுமன்றத்திற்கு வருகை தர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் காலப்பகுதியில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam