ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நாளை நாடாளுமன்றில் விவாதம்
அரசியல் சாசனத்தின் பிரகாரம் உரிய காலத்தில் ஜனாதிபதி தேர்தலை நடாத்துவது குறித்து நாளைய தினம் நாடாளுமன்றில் அவை ஒத்தி வைப்பு விவாதம் நடத்தப்பட உள்ளது.
இந்த விவாதத்திற்கு கட்சித் தலைவர்கள் அனைவரும் இணக்கம் வெளியிட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல்
அரசியல் சானத்தின் பிரகாரம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17ம் திகதி முதல் ஒக்ரோபர் மாதம் 16ம் திகதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தலைமையில் கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற விவாதம் நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
குறிப்பாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் கால வரையறை தொடர்பில் நாளை அவை ஒத்தி வைப்பு விவாதம் நாடாளுமன்றில் நடைபெறவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam
