மட்டக்களப்பின் நிர்வாகப் பிரச்சனை- நாடாளுமன்றில் தமிழ்-முஸ்லிம் கட்சிகள் வாதப்பிரதிவாதம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ளுார் நிர்வாகத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள எல்லை நிர்ணய குழுவின் ஊடாக தீர்வை காணமுடியும் என்று அமைச்சர் ச்சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் நஸிர் அஹமட் இன்று நாடாளுமன்றில் கொண்டு வந்த நாடாளுமன்ற ஒத்திவைப்பு தனிஆள் பிரேரணையின் போது பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் மற்றும் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகம் என்பன தொடர்பிலேயே இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த பிரேரணையின்போது ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹாரிஸ் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோரும் உரையாற்றினர்.
அதேநேரம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேரத்துரை சந்திரகாந்தன், இந்த பிரேரணையில் உரையாற்றும் போது இந்த பிரேரணை இனவாதமாக கருத்துடன் உட்புகுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தினார்.
அங்குள்ள பிரச்சனை நிர்வாகப் பிரச்சனையாக பார்க்கப்பட்டு தீர்க்கப்படவேண்டும்
இந்தநிலையில் கேபிசி மத்தி, கேபிசி மேற்கையும் இணைந்து முஸ்லிம் பிரதேசத்தையும் இணைத்து பிரதேச செயலகம் ஒன்றை அமைத்தால், பிரச்சனை தீரும் என்றும் சந்திரகாந்தன் குறிப்பிட்டார்
இதனையடுத்தே அமைச்சர் ச்சமல் ராஜபக்ச, புதிதாக அமைக்கப்பட்டுள்ள எல்லை நிர்ணய குழுவின் ஊடாக தீர்வை காணமுடியும் என்று குறிபபிட்டார்.





உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 11 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
