தொலைக்காட்சி அரசியல் விவாதத்தில் பங்கேற்ற பூனை ( காணொளி)
தொலைக்காட்சி நேரலையில் இடம்பெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சியின் போது பூனை ஒன்று குறுக்கிட்ட நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
ஜோர்ஜியாவில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. ஜோர்ஜியாவின் அரசியல் தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்த நாட்டின், முன்னணி தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
Ve vysílání gruzínského tv kanálu Kavkasia řešili důležité vnitropolitické problémy. Jenže, pak se objevila nečekaná návštěva a bylo problémech. Kdyby to vřelo v OVM, tady je návod jak to zarazit ? pic.twitter.com/tfDl1JiBCB
— Roman M (@Fbeyeee) November 22, 2021
நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் இந்த நேரடி விவாத நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தனர்.
இதன்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜோர்ஜியாவின் அரசியல் குறித்து அரசியல்வாதி ஒருவரிடம் நிகழ்ச்சி அரங்கில் விவாதம் நடத்திக்கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென மேசையின் மீது பூனை ஒன்று தாவி அமர்ந்து கொண்டது.
இதனால், சற்று அதிர்ச்சியடைந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் உடனடியாக தம்மை சுதாரித்துக்கொண்டு, ”இது எங்கள் செல்லப்பிராணி ககுஷ்சா. இவர் நமது விவாதத்தில் கலந்துகொள்ளமாலா?” என்று கேட்டார்
இதன்போது விவாத நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறதா? என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற அரசியல்வாதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த தொகுப்பாளர், நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.
எனினும் பரவாயில்லை என்று பதிலளித்தார்.
இதன் பின்னர் பூனை தாமாகவே விவாத மேடையில் இருந்து இறங்கிச்சென்றது.