எரிபொருள் குதங்கள் தொடர்பான உடன்படிக்கைக்காகவே பசில் இந்தியா பயணம்- ஜேவிபி நாடாளுமன்றில் பகிரங்கம்
திருகோணமலையின் எரிபொருள் குதங்கள் தொடர்பில் இந்தியாவுடன் உடன்படிக்கையை செய்துக்கொள்ளும் பேச்சுவார்த்தைக்காகவே அமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியாவுக்கு சென்றுள்ளதாக ஜேவிபி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க, எரிபொருள் கொள்வனவுக்காக 500 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ளும் பேச்சுவார்த்தைக்காக பசில் ராஜபக்ச இந்தியாவுக்கு சென்றுள்ளார்
இந்தநிலையில் குறித்த 500 மில்லியன் டொலர்களுக்கு ஈடாக எரிபொருள் குதங்கள் தொடர்பான உடன்படிக்கை செய்துக்கொள்ளப்படவுள்ளது என்று அனுர குமார குறிப்பிட்டார்.
இந்த உடன்படிக்கை 2003ஆம் ஆண்டு குறுகிய காலத்தில் செய்துக்கொள்ளப்பட்டது. இதன்போது 6 மாதங்களுக்குள் உடன்படிக்கை செய்துக்கொள்ளவேண்டும் என்ற உடன்பாடும் இருந்தது
எனினும் கடந்த 18 வருடங்களாக இந்த உடன்பாடு செய்துக்கொள்ளப்படவில்லை என்று அனுர குமார சுட்டிக்காட்டினார்
