ஜனாதிபதியும் பிரதமரும் கேட்கும் போதெல்லாம் நிதிகளை வழங்கும் பி.பி ஜெயசுந்தர
ஜனாதிபதியும் பிரதமரும் கேட்கும் போது நிதியை ஒதுக்கக்கூடிய பிபி ஜெயசுந்தர காரணமாகவே நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஜேவிபி நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின்நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க இந்தக்குற்றச்சாட்டை சுமத்தினார்.
நச்சுக் கலந்த பசளைகளுக்கு அனுமதி வழங்குவதற்கும் அவர் உத்தரவிட்டதாக அனுர குமார குறிப்பிட்டார்
அவரே இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நனோ யூரியாவுக்கான பணத்தை தனியாா் முகவருக்கு பாிமாற்றம் செய்யுமாறு உத்தரவிட்டதாகவும் அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார்.
இந்தநிலையில் அரசாங்கத்தின் திட்டமிடப்படாத கொள்கைகள், இயற்கை பசளை தொடர்பாக மக்கள் மத்தியில் இருந்து நம்பிக்கையை தகர்க்கச்செய்திருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam