இலங்கை நாடாளுமன்றத்தில் விடுதலைப் புலிகளின் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை பதிவு செய்த உறுப்பினர்! (Video)
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருக்கு நாடாளுமன்றத்தில் வைத்து பிறந்த நாள் வாழ்த்துக்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் வாழ்த்துக்களைப் பதிவு செய்திருக்கிறார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
போர் காலத்தின்போது கிபிர் விமானங்கள் வந்தால், தமிழ் மக்கள் எந்தளவு பயந்தார்களோ, அதேபோன்று இன்று மஹாவலி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றபோது தமிழ் மக்கள் அச்சப்படுகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே மஹாவலி திட்டத்தின் ஊடாக வடமாகாணத்தின் குடிப்பரம்பலை மாற்றும் முயற்சிகள் நிறுத்தப்படவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து அத்தியாவிய பொருட்களும் இரசாயன உற்பத்தி பொருட்களாகவே இருப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் மேற்கொள்கின்ற அனைத்து நடவடிக்கைகளும் தனிப்பட்டவர்களுக்கு இலாபம் தரும் திட்டங்களாகவே அமைந்துள்ளதாக நிர்மலநாதன் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் அமைச்சர்கள் அங்கம் வகிக்கின்றபோதும் அவர்களால் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளை அவர்களால் தீர்க்கமுடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 67 ஆவது பிறந்த தினம் இன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam