சிங்கள பௌத்த கொள்கையே நாட்டின் இன்றைய நிலைக்கு காரணம்- கஜேந்திரகுமார் நாடாளுமன்றில் குற்றச்சாட்டு
உள்நாட்டு கொள்கைகளின் நீடிப்பாகவே இலங்கையின் வெளியுறவு கொள்கை அமைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தொிவித்துள்ளார்
இதன் அடிப்படையில், இலங்கையின் சிங்கள பௌத்த கொள்கையே , வெளியுறவுத்துறையில் செல்வாக்கு செலுத்துவதாக கஜேந்திரகுமார் குறிப்பிட்டார்.
எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், அந்த அரசாங்கம் சிங்கள பௌத்த கொள்கையையே பின்பற்றி வருகிறது.
சுதந்திரத்துக்கு பின்னர் இலங்கையில் கொண்டு வரப்பட்ட சிங்களபௌத்த கொள்கைகள் காரணமாக, உள்நாட்டுக்குள்ளேயே எதிரிகள் உருவாக்கப்பட்டனர்.
இந்தியாவின் தமிழ் நாட்டில் உள்ள தமிழர்கள், இலங்கையின் தமிழா்கள் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்தமையால், இலங்கையின் பெரும்பாலானோர் சுதந்திரத்துக்கு பின்னர் இந்தியாவை எதிரியாகவே கருதினர்.
இதன் அடிப்படையில் ஆரம்பத்தில் தமிழர்கள், இலக்காக்கப்பட்டனர். தற்போது முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இலக்காக்கப்படுகின்றனர்.
உள்நாட்டுக்குள் இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ள நிலையிலேயே பூகோள அரசியலில் சர்வதேச நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
மாறாக, இலங்கை பன்மைத்துவ நாடாக அமைந்திருந்தால், பூகோள அரசியலின் நன்மைகளை நாடு பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
இதேவேளை போருக்கு பின்னர், சர்வதேச நாடுகள், நாட்டின் சொத்துக்கள் எதனைக் கேட்டாலும் அவற்றை விற்பனை செய்யும் அளவுக்கு இலங்கை சென்றுள்ளதாக கஜேந்திரகுமார் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் வெளியுறவு அமைச்சராக இருக்கும் ஜீஎல் பீரிஸ், தமது செல்வாக்கை பயன்படுத்தி, நாட்டுக்கு தேவையான வெளிநாட்டுக்கொள்கையை மாற்றியமைப்பதற்காக இலங்கையின் உள்நாட்டுக் கொள்கையில் மாற்றங்களுக்கு முயற்சிக்கவேண்டும் என்று கஜேந்திரகுமார் கேட்டுக்கொண்டார்.

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
