ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி தகுதியற்றவர் -ஹரினி அமரசூரிய
வல்லரசு நாடுகளுக்குள் சிக்கிக்கொள்ளாது நாட்டை ஆட்சி செய்யவேண்டியது அரசாங்கத்தின் கடமை என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், இதனைக் குறிப்பிட்டார் நாடுகளுடன் உடன்படிக்கைகள் செய்யப்படும்போது, அந்த உடன்படிக்கைகள் உரிய வகையில் மாறிமாறி வரும் அரசாங்கங்களினால் முன்னெடுக்கப்படவேண்டும். குறிப்பாக இலங்கை- இந்திய நாடுகளுக்கு இடையிலான 1987 ஆம் ஆண்டு உடன்படிக்கை தொடர்பில் தாம் இந்த கருத்தை வெளியிடுவதாக அவர் தெரிவித்தார். இதுவரை நடக்காதுபோனாலும் நாடுகளுக்கு இடையிலான உடன்படிக்கைகள் கிழத்தெறியப்படவேண்டும் என்ற நிலைமை ஏற்படக்கூடாது என்று சித்தார்த்தன் கேட்டுக்கொண்டார் இதேவேளை ஊடகவியலாளர்களுக்கு உரிய வசதிகள் செய்துக்கொடுக்கப்படவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். குறிப்பாக பொருளாதார ரீதியில் ஊடகவியலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தர்மலிங்கம் சித்தார்த்தன் சுட்டிக்காட்டினார். |
பிராந்திய ஊடகவியலாளர்கள் அனைத்து ஊடகங்களுக்கும் பணியாற்றுவதற்கு ஊடக நிறுவனங்கள் அனுமதியளிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் அனுாப பிரஸ்கோல் இந்தக்கோரிக்கையை இன்று விடுத்தார். சில ஊடக நிறுவனங்கள் தமது நிறுவனங்களுக்கு மாத்திரமே பணியாற்றவேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளன. இது ஊடகவியலாளர்களின் நிதி ரீதியான விடயங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் அவர் சுட்டிக்காட்டினார் |
அரசாங்க அமைச்சர்கள், எதிர்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கு உரிய பதில்களை வழங்கவேண்டும். இதனை விடுத்து எதிர்கட்சியினரை முட்டாள்கள் என்றும் விமா்சனம் வெளியிவதும் தவிர்க்கப்படவேண்டும் என்று எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜபுர் ரஹ்மான் இன்று நாடாளுமன்றில் இன்று கேட்டுக்கொண்டார். கிண்ணியா படகுசேவையின் போது ஏற்பட்ட விபத்தில் பலர் உயிரிழந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று நிமல் லன்சா பதவி விலகவேண்டும் என்று நேற்று கோரியபோதே, அவர் தமக்கு எதிராக விமர்சனத்தை வெளியிட்டதாக முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
எனினும் இதனை மறுத்த நிமல் லன்சா, தாம் படகு சேவைக்கு அனுமதி வழங்கியபோதும், கிண்ணியா நகரசபைக்கு அந்த அனுமதியை வழங்கவில்லை என்று குறிப்பிட்டார். |
அமாிக்காவில் நடைபெறும் ஜனநாயக நாடுகளுக்கான மாநாட்டுக்கு இலங்கை அழைக்கப்படாமை குறித்து இலங்கையின் நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய இந்த விடயத்தை இன்று நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தார். இதேவேளை பிரித்தானியாவின் மனித உரிமை அறிக்கையில் இலங்கை தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வெளிநாட்டு அமைச்சர் பதவியில் திறமையானவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள போதும், ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள மொஹான் பீாிஸ், ராஜதந்திர தகுதியற்றவர் என்று ஹரனி குறிப்பிட்டார். ”காணாமல் போனோர் தொடர்பில் அண்மையில் இடம்பெற்ற சர்வதேச நிகழ்வு ஒன்றில், இலங்கையில் காணாமல் போகச்செய்யப்பட்ட செய்தியாளர் பிரகீத் எக்னலிகொட வெளிநாடு ஒன்றில் இருப்பதாக மொஹான் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்” இதன்போது நிகழ்வில் பங்கேற்றவர்கள், அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்று கூறமுடியுமா? என்று கேட்டபோது, அது கடவுளுக்கு மாத்திரமே தெரியும் என்று மொஹான் பீரிஸ் பதிலளித்ததாக ஹரின் அமரசூரிய குறிப்பிட்டார்.
எனவே இவ்வாறான ஒருவர் ஐக்கிய நாடுகள் சபையில் எவ்வாறு இலங்கையின் பிரதிநிதியாக இருக்கமுடியும் என்று ஹரினி அமரசூரிய கேள்வி எழுப்பினார். |
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
வெண்ணிலா சொன்ன விஷயத்தை கேட்டு கடும் ஷாக்கில் கண்மணி, என்ன முடிவு எடுப்பார்.. அன்புடன் கண்மணி புரொமோ Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan