இலங்கை இராணுவத்திற்கு உணவு கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்! அம்பலத்திற்கு வந்த தகவல் - அமைதியான ஆளும் தரப்பு
இராணுவ முகாம்களில் பெரும்பாலானோருக்கு உரிய உணவுகள் கிடைக்கவில்லை என்று நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இந்த விடயத்தை இன்று வெளிப்படுத்தியுள்ளார்.
இராணுவ முகாம்களில் உள்ள படையினருக்கு நாள் தோறும் வெவ்வேறு உணவுகள் வழங்கப்படுகின்றன.
எனினும் கடந்த இரண்டு மாதங்களாக சில இராணுவ முகாம்களுக்கு கோழி இறைச்சி கிடைக்கவில்லை.
அதற்கு பதிலாக முட்டை மற்றும் கருவாடு என்பன விநியோகிக்கப்பட்டுள்ளதாக நளின் பண்டார குறிப்பிட்டார்.
பாதுகாப்பு செயலாளர் என்ற நிலையை வகித்த தற்போதைய ஜனாதிபதியின் ஆட்சியின் கீழ் படையினருக்கு உணவு உரியமுறையில் கிடைக்கவில்லை என்பதை முக்கியமான பிரச்சினையாகும் என்று நளின் பண்டார தெரிவித்தார்.
எனினும் படையினர் போராட்டம் செய்யமுடியாது என்ற நிலையில் இந்த விடயம் குறித்து தேடி பாா்க்கவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
இதேவேளை, இதுதொடர்பில் நாடாளுமன்றத்தில் பேசப்பட்ட போதும் ஆளும் தரப்பினை சேர்ந்த எவரும் பதில் வழங்காமல் அமைதி காத்துள்ளனர் என்றும் நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam