அரசாங்கம் ”பாம்பு நடனம் ஆடியது” ”பாணி நடனம் ஆடியது.” ”காபனிக் நடனம் ஆடுகிறது”
இலங்கையில் இன்று ஜீஆா் (GR) பாதீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பெசில் ராஜபக்ச கூறுகின்றபோதும் அது, (கெசட் ரிசேவ்ட் Gazette Reversed) (GR) வர்த்தமானியை திரும்பப்பெறும் பாதீடாகும் என்று எதிா்கட்சி தெரிவித்துள்ளது.
உணவு பற்றாக்குறை ஏற்படாது என்று அமைச்சா் மஹிந்தாநந்த கூறினாலும், எதிா்வரும் மாா்ச் அளவில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அரிசி இறக்குமதி செய்தால் தாம் பதவி விலகுவதாக கூறிய மஹிந்தாநந்த, கூறியப்படி பதவி விலகவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தோ்தலின்போது ”அரசாங்கம் பாம்பு நடனம் ஆடியது”.” கொரோனா பாணி நடனம் ஆடியது.” ”இப்போது காபனிக் நடனம் ஆடுகிறது” என்று மனுஷ நாணயக்கார குறிப்பிட்டார்.
இரசாயன பசளை இறக்குமதி செய்யப்பட்டால், அமைச்சர் மஹிந்தாநந்த பதவி விலகவேண்டும் என்று மனுஷ நாணயக்கார கோாிக்கை விடுத்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முழு உண்மைகளும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொனிக் என்பவர் தொடர்பில் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் அரசாங்கம் அதற்கு எந்த பதிலையும் வழங்கவில்லை என்று மனுஷ நாணயக்கார குறிப்பிட்டார்.



உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 17 மணி நேரம் முன்

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam

அமெரிக்க - சீனா வர்த்தக ஒப்பந்தம்... முகேஷ் அம்பானியை விட மூன்று மடங்கு சம்பாதித்த நபர் News Lankasri

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
