மூன்றாவது நாளாகவும் விசாரணை செய்யப்பட்ட அருட் தந்தை சிறில் காமினி
மூன்றாவது நாளாக, அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுத்துறையில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
சுமார் ஐந்து மணித்தியாலங்கள் வாக்குமூலத்தைப் பதிவு செய்ததன் பின்னர் அவர் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறினார்
இலங்கையின் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவரால் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலத்தை வழங்குவதற்காக அவர், இதற்கு முன்னர் நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய திகதிகளில் இரண்டு தடவைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியிருந்தார்.
ஒக்டோபர் 23 ஆம் திகதியன்று, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து வெளிநாட்டில் வாழும் இலங்கை சமூகத்திற்கு விளக்கமளிக்கும் வகையில் இடம்பெற்ற இணையத்தள மாநாடு ஒன்றில், அருட்தந்தை சிறில் காமினி உட்பட்டவர்கள், அரச புலனாய்வுத்துறையின் தலைவர் சுரேஸ் சாலி ,தேசிய தவ்ஹீத் ஜமாத் (NTJ) தலைவர் சஹ்ரான் ஹாஷிமுக்கு நிதி மற்றும் பிற உதவிகளை வழங்கியதாக குற்றம் சுமத்தினார்.
இந்த குற்றச்சாட்டை மறுத்த சுரேஸ் சாலி, இது தொடர்பில் விசாரணை செய்யப்படவேண்டும் என்று கோரி குற்றப்புலனாய்வு துறையில் முறைப்பாட்டை செய்திருந்தார்.
இதன் அடிப்படையிலேயே, அருட் தந்தை சிறில் காமினியிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.






உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 17 மணி நேரம் முன்

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
