இலங்கையின் நாடாளுமன்றத்தை ஆக்கிரமித்த ”பைத்தியங்கள்”
2022ஆம் ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பாதீடு, ”சேர்” கடந்த இரண்டு வருடங்களில் கண்ட பின்னடைவின் சாராம்சமாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
”சிஸ்டம் சேஞ்” செய்யப்போவதாக வந்த ஜனாதிபதி இறுதியில் ”டட்லி”க்கு அடிபணிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாகவே நாட்டின் அரிசியின் விலையை கட்டுப்படுத்தும் அதிகாரம் அரிசி வா்த்தவர்களுக்கு வழங்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பைத்தியமான ஒருவர், தமக்கு குடும்பத்தினரையே தாக்குவார். இதனை போன்றே, இன்று தமக்கு வாக்களித்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும் ஹரின் பொ்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் அரச சேவையாளர்கள் ”பேஸ்புக்”கில் அரசாங்கத்தை விமர்சிக்கக்கூடாது என்று இன்று கூறப்பட்டுள்ளது.
சதாம் ஹூசைன் போன்ற அதிகார மோகம் கொண்டவர்கள், பலமிக்க அரசாங்கங்களுடனேயே மோதினார்.
எனினும் ”எங்களுடைய சேர் ஆசிாியா் மற்றும் தமக்கு வாக்களித்தவா்களுடனே மோதுகிறார்” என்றும் ஹரின் பொ்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை பைத்தியமான ஒருவரே ஏனையவா்களை பைத்தியம் என்று கூறுவார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜயசேகர தெரிவித்தார்.
பதுளையில் வாக்கு கேட்க முடியாமல் தேசியப்பட்டியலில் வந்த ஹாின் பெர்ணான்டோவும் பைத்தியமே என்று அவர் குறிப்பிட்டார்.



இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri