தனிச் சட்டத்தின்கீழ் கொலையாளிகளுக்கும், நண்பர்களுக்கும் வழங்கப்படும் ஜனாதிபதியின் பொது மன்னிப்பு
இலங்கையில் குற்றவாளிகள் கொலையாளிகள் மற்றும் திருடர்களுக்கே பொதுமன்னிப்பு வழங்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இது நாட்டின் சட்டத்துக்கு அப்பால் தமது தனிப்பட்ட சட்டத்தின் நடைமுறைகளாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
நீதியமைச்சின் நிதியொதுக்கீட்டு விவாதத்தில் இன்று பங்கேற்று உரையாற்றிய அவர், இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
தமிழர்களை பெரும்பான்மையாகக் கொண்ட வடக்குகிழக்கிலும் பெரும்பாலான தமிழர்களைக் கொண்டுள்ள நுவரெலியவிலும் ஹட்டனிலும் வலப்பனையிலும் கல்கிஸ்ஸையிலும் நீதிமன்ற நடவடிக்கைகள் முழுமையாக சிங்கள மொழியிலேயே மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்கு பின்னால் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரல் இருப்பதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டார்.
இதேவேளை வடக்குகிழக்கின் பெரும்பாலான இடங்களில் நீதிபதிகள் தமிழர்களாக இருக்கின்றபோதும் நீதிமன்ற பணியாளர்கள் சிங்களவர்களாக உள்ளனர்.
நடைமுறையில் இது யதார்த்தமற்ற செயற்பாடு என்று கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டினார்
எனவே ஏன் இந்த இரட்டை கொள்கையை பின்பற்றப்படவேண்டும் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நீதியமைச்சர் அலி சாப்ரியிடம் கேள்வி எழுப்பினார்
