நாடாளுமன்றின் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படாது! - சபாநாயகர்
நாடாளுமன்றின் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படாது என சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக, ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோவிட் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
எனினும், நாடாளுமன்றம் மூடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ள போதிலும், அது பாரதூரமான நிலைமையல்ல எனவும் இதனால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படாது எனவும் சபாநாயகர் ஆங்கில ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மூன்று கோவிட் தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பின்னணியில் பத்து முதல் பதினைந்து உறுப்பினர்கள் நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri
