விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுமா? அரசு தரப்பில் இருந்து வெளியான தகவல்
அமைச்சரவை தோல்வியடைந்துள்ளதால் முழு நாடும் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டை நிர்வகிக்க முடியாவிடின் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது சிறந்ததாகும் என இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
தமக்கு தேவையான அரசாங்கத்தை தோற்றுவிக்க மக்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள விரக்தி நிலை நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் செல்கிறது. தவறுகள் திருத்திக் கொள்ளப்படுவது அவசியமாகும்.
விவசாயத்துறை தொடர்பில் மாற்றுத்திட்டங்களை செயற்படுத்துவது அவசியமானதாகும். உணவு தட்டுப்பாடு ஏற்படும் என பொருளாதார நிபுணர்களின் எதிர்வு கூறல் குறித்து விவசாயத்துறை அமைச்சு அதிக கவனம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
பார்த்தாலே பசி எடுக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு : இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது! Manithan