ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாது : எஸ்.பி. திஸாநாயக்க நம்பிக்கை - செய்திகளின் தொகுப்பு
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்காகன முயற்சி வெற்றியளிக்காது என தான் நம்புவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க (S.B. Dissanayake) தெரிவித்துள்ளார்.
அரசமைப்பின் பிரகாரம் செப்டெம்பர், ஒக்டோபர் இடைப்பட்ட காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் (Presidential Election) நடத்தப்பட வேண்டும்.
ஜனாதிபதி நினைத்தால் நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்தலாம். அவ்வாறு இல்லாவிட்டால் 113 அமைச்சர்கள் இணைந்து யோசனையொன்றை வழங்கினால் முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தலை நடத்தலாம்.
இது ஒரு சவாலுக்குரிய விடயம். எனவே அந்த முயற்சி கைகூடாது என்றே கருதுகின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு..
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri