நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வைக்குழுகளுக்கான உறுப்பினர்கள் நியமனம்
நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வைக்குழுக்கு தற்போதுவரை நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் பெயர்ப்பட்டியல் வெளியாகியுள்ளது.
பொது அலுவல்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழு (கோப் குழு), பொதுக் கணக்குகளுக்கான நாடாளுமன்றக் குழு (கோபா குழு) உள்ளிட்ட 24 நாடாளுமன்றக் குழுக்களுக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியலை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச நேற்று (22) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வு
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வில் பொது அலுவல்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் (கோப் குழு) உறுப்பினர் பட்டியலில் அந்தக் குழுவின் முன்னாள் தலைவர் ரஞ்சித் பண்டாரவின் பெயரும் இடம்பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வில் பொது விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவராக கடமையாற்றிய ரஞ்சித் பண்டார, இலங்கை கிரிக்கெட் சங்கம் தொடர்பான விசாரணைகளை கையாண்ட விதம் குறித்து அண்மையில் பல்வேறு தரப்பினரால் கடுமையாக குற்றம் சாட்டப்பட்டது.
மேலும், அவரை அந்தப் பதவியில் இருந்து நீக்கவே நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் இடைநிறுத்தப்பட்டதாக அரசியல் அரங்கில் அப்போது பரபரப்பாக பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |