நாடாளுமன்றத்தில் சிறப்பு பாதுகாப்பு ஆய்வு - சபாநாயகர் விடுத்துள்ள உத்தரவு
நாடாளுமன்றம் சிறப்பு பாதுகாப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, அடுத்த மாதம் 4, 6 மற்றும் 7 ஆகிய மூன்று நாட்களில் இந்த ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
உறுப்பினர்களின் ஓய்வறைகள் மற்றும் அலுமாரிகள் உட்பட முழு நாடாளுமன்ற கட்டடமும் பாதுகாப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
உயர் பாதுகாப்பு பகுதி
நவம்பர் மாதம் 7ஆம் திகதி நாடாளுமன்ற கட்டடத்தின் உயர் பாதுகாப்பு பகுதிகளும் பாதுகாப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அன்றையதினம் விருந்தினர்களுக்கு மட்டுமே பொது கேலரி அனுமதிக்கப்படும் என சபாநாயகர் கூறினார்.

விருந்தினர்களுக்கான அழைப்பிதழ்கள் நிதி அமைச்சினால் வழங்கப்படும். மேலும் சிறப்பு பாதுகாப்பு திட்டம் அமலில் இருக்கும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்திற்கு வாகனங்களில் வருகை தரும் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாரதியுடன் வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் அறிவிப்பு
அன்று நாடாளுமன்ற வாகன நிறுத்துமிடம் மூடப்படும் என்பதால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரும் வாகனங்கள் வாகன நிறுத்துமிடத்திற்கு அனுப்பப்படும் என சபாநாயகர் தெரிவித்தார்.

அன்றைய தினம் சிறப்பு போக்குவரத்துத் திட்டமும் செயல்படுத்தப்படும் என்று சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam