நேர்மையான ஆட்சியாளர்கள் இருந்தால் மக்கள் தியாகம் செய்ய முன் வருவார்கள் - கஜேந்திரகுமார்
தம்மை ஆள்பவர்கள் நேர்மையானவர்களாக இருந்தால் மட்டுமே மக்களும் எந்த சவாலையும் எதிர்கொண்டு தியாகம் செய்ய முன்வருவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்றைய தினம்(01.07.2023) உரையாற்றும் போதே இந்த விடயத்தை தெரிவித்தார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், தமது தலைவர்கள், தம்மை வழிநடத்துபவர்கள் எனவும் தமது ஆட்சியாளர்கள் நேர்மையானவர்கள் எனவும் நம்புகின்ற மக்கள் நம் நாட்டில் காணப்படுகின்றனர்.
நாட்டுக்காக தாங்கள் சரியென நம்புகின்ற விடயத்துக்காக எந்தவொரு அர்ப்பணிப்பையும் செய்ய தயாராகவே இருக்கிறார்கள்.
மத்திய வங்கி பிணைமுறி ஊழல்
வடக்கு - கிழக்கு மக்கள் தமது தேச விடுதலைக்காக தமது உரிமைகளுக்காக தமது உயிரையும் அற்பணிக்க தயாராக இருந்தார்கள். தெற்கில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதென நம்புகிற போது தென்னிலங்கை இளைஞர்கள் சில தடவைகள் புரட்சியில் ஈடுபட்டு உயிரை அர்ப்பணித்திருந்தார்கள்.
இராணுவத்தை எடுத்துகொண்டால் கூட அவர்கள் தாம் சரியென நம்பிய ஒரு விடயத்துக்காக உயிரை கொடுக்க முன்வந்திருந்தார்கள்.
அது போல இந்த பொருளாதார நெருக்கடி காலத்திலும் அதில் இருந்து மீளுவதற்காக மக்கள் எந்தவொரு தியாகத்தையும் செய்ய தயாராகவே இருப்பார்கள்.
ஆனால் நான் முதலில் சொன்னவாறு, தம்மை ஆள்பவர்கள் நேர்மையானவர்களாக இருந்தால் மட்டுமே மக்களும் எந்த சவாலையும் எதிர்கொண்டு தியாகம் செய்ய துணிவார்கள்.
ஆனால்
இன்று எமக்கு முன்னால் இருப்பது யார்??
நாட்டை வங்குரோத்து ஆக்கியவர்களும், மத்திய வங்கி பிணைமுறி ஊழல் மூலம்
பொருளாதாரத்தை சூறையாடியவர்களும் ஒன்று சேர்ந்துகொண்டு நாட்டை ஆளும் போது ,
அவர்கள் நாட்டின் பொருளாதாரத்தை சீராக்கி மக்களின் நலன்களை முன்னிறுத்தி
முடிவெடுபார்கள் என்று எவருக்கும் துளியளவு நம்பிக்கையும் இருக்காது. என என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.