நாடாளுமன்ற சமையலறை தொடர்பில் சபாநாயகர் கூறும் அதிர்ச்சி தகவல்
நாடாளுமன்ற சமையலறை நிறுவப்பட்ட 40 ஆண்டுகளில் இதுவரை எந்த பொது சுகாதார பரிசோதகராலும் ஆய்வு செய்யப்படவில்லை என சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் இடம்பெற்ற உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை மதிப்பிடுவதற்கான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவு சுவையூட்டும் பொருட்கள் நாடாளுமன்ற சமயலறையில் இருந்ததாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் முதன்முறை
நாட்டின் உச்சபட்ச சட்டத்தை உருவாக்கும் அமைப்பான நாடாளுமன்றத்தில் அசுத்தமான உணவை உட்கொண்டு உறுப்பினர்கள் நோய்வாய்ப்பட்டால் அது மிகவும் கடுமையான சூழ்நிலையை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், ஆய்வின் போது, சமையலறையில் எலிகள் மற்றும் கரப்பான் பூச்சிகள் காணப்பட்டதாகவும், சமையல் பாத்திரங்கள் உடைந்து, வளைந்து, கறை படிந்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், நாடாளுமன்ற சமையலறை, அதன் வரலாற்றில் முதன்முறையாக சோதனை செய்யப்பட்டிருப்பதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




