தேசிய சபையின் நியமனங்கள் தொடர்பில் நாடாளுமன்றில் சபாநாயகர் அறிவிப்பு (Video)
நாடாளுமன்ற அங்கீகாரத்தை பெற்ற தேசிய சபையின் நியமனங்கள் தொடர்பில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன இன்றைய தினம் (23.09.2022) நாடாளுமன்றில் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் சபாநாயகர் தேசிய சபையின் தலைவராக செயற்படுவதுடன், பிரதமர், அவைத்தலைவர், எதிர்கட்சி தலைவர், அரசாங்கக்கட்சியின் பிரதம அமைப்பாளர் ஆகியோருடன் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த தேசிய சபையில் செயற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, டக்ளஸ் தேவானந்தா, நஸீர் அஹமட், சிசிர ஜெயகொடி ஜோன்ஸ்ட்ன் பெர்ணான்டோ, டிரான் அலஸ், சிவநேசத்துரை சந்திரகாந்தன், ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, பவித்ரா வன்னியாராச்சி, வஜிர அபேவர்த்தன, ஏ.எல்.எம்.அத்தாவுல்லாஹ், திஸ்ஸ விதாரன, ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, பழனி திகாம்பரம், மனோ கணேசன் ரோஹித்த அபேகுணவர்த்தன, நாமல் ராஜபக்ச, அலி சப்ரி ரஹீம், ஜீவன் தொண்டமான், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அத்துரலியே ரத்தன, அசங்க நவரட்ன, சி.வி விக்னேஸ்வரன் மற்றும் சாகர காரியவசம் ஆகியோர் இந்த சபையில் செயற்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு
நாடாளுமன்ற அமர்வு இன்று முற்பகல் 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
முற்பகல் 09.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு மீதான அனுதாபப் பிரேரணை இடம்பெறவுள்ளது.
அதனையடுத்து, பிற்பகல் 1 மணி முதல் பிற்பகல் 5.30 மணிவரை ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் மறைந்த கௌரவ அமரகீர்த்தி அதுகோரள மீதான அனுதாபப் பிரேரணையின் தொடர்ச்சி இடம்பெறவுள்ளது.
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam