அரச நிறுவனங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள யோசனை
அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு இழப்பை ஏற்படுத்தும் திறைசேரியின் உத்தரவாதங்களை கட்டுப்படுத்துதல், அவற்றின் நிதி மீதான கட்டுப்பாடுகள் மற்றும் நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான கொள்கை என்பன விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய யோசனையில் சேர்க்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள இந்த யோசனை, அரசுக்கு சொந்தமான நிறுவன சீர்திருத்தக் கொள்கையின் அடிப்படையில் சட்டமா அதிபரால் இறுதி செய்யப்படவுள்ளது.
திறைசேரியால் வழங்கப்படும் உத்தரவாதங்கள்
முன்மொழியப்பட்ட யோசனையில், முக்கிய அம்சங்களில் ஒன்றாக அரச வங்கிளுக்கு திறைசேரியால் வழங்கப்படும் உத்தரவாதங்கள் குறைக்கப்படும் என்பதாகும்.
அத்துடன் இந்த யோசனையில் அரச நிறுவனங்களின் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகளும் உள்ளடக்கப்படவுள்ளன.
இந்தநிலையில் அரசுக்கு சொந்தமான சுமார் 80 நிறுவனங்கள் மறுசீரமைப்பு செயல்முறைக்கு உட்படுத்தப்படவுள்ளன
புதிய யோசனையின்படி அனைத்து வணிக நிறுவனங்களும் நிதி அமைச்சின் (Ministry ot Finance) கீழ் கொண்டு வரப்படுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும்.
இதன்படி குறித்த நிறுவனங்களின் பங்கில் 100 சதவீதத்தை நிதி அமைச்சகம் தக்க வைத்துக் கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |