மக்கள் போராட்டத்தை சிதைக்கும் பின்னணியில் சில குழுக்கள்: ஹரின் பெர்னாண்டோ தகவல்
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பொதுமக்களின் நலனுக்காக தொடர்ந்தும் செயற்பட்டு வரும் நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் தாம் ஏமாற்றமடைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எப்பொழுதும் மக்களின் உரிமைகளுக்காக நிற்கும் தனது பிரிவினருக்கு பொதுமக்கள் ஏன் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பொறுப்பற்ற முறையில் செயற்படும் சில குழுக்கள் மக்களின் போராட்டத்தின் பின்னணியில் உள்ள முக்கிய நோக்கத்தை சிதைக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் நாடாளுமன்றத்திற்கு செல்லும் வீதியை மறித்து எதிர்ப்பில் ஈடுபட்ட போராட்டகாரர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை கடந்து செல்ல விடாமல் தடையேற்படுத்தியிருந்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வாகனத்தில் இருந்து இறங்கி வந்தனர். எனினும் அதனை போராட்டகாரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார, ஹெக்டர் ஹப்புஹாமி ஆகியோரே இந்த சிக்கலான நிலைமையை எதிர்நோக்கியிருந்தனர்.

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 22 மணி நேரம் முன்

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
